தமிழகம் அமைதி பூங்காவாக மாறியது எப்படி?.. சென்னை பரப்புரையில்... முதல்வர் பழனிசாமி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் அமைதி பூங்காவாக மாறி இருப்பதாகவும், மகளிருக்கு பாதுகாப்பான நகராக சென்னை திகழ்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (29.03.2021) இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். மயிலை மாங்கொல்லையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், நேற்றைப் போலவே கிட்டதட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இன்றைய பிரச்சாரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருக்க, மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
தியாகராயர் நகர் தொகுதி வேட்பாளர் சத்ய நாரயணன் என்ற சத்யாவுக்காக அசோக் நகர் அம்பேத்கார் சிலை சந்திப்பு அருகே பேசினார். அப்போது அவர் சென்னை மாநகரம் மகளிருக்கு பாதுகாப்பான நகரமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
அதன் பிறகு அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் கோகுல இந்திராவுக்கு வாக்கு கேட்டு சி.எம்.டி.ஏ. காலனியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
மேலும் திருவல்லிகேணி - சேப்பாக்கம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் கசாலியை ஆதரித்து ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வள்ளுவர் கோட்டம் அருகிலும், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து அரங்கநாதன் தெரு சுரங்கப்பாதை அருகிலும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்து எம்.ஜி.ஆர் நகரிலும், மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பென்ஜமின், பூந்தமல்லி வேட்பாளர் ராஜமன்னாரை ஆதரித்து முகப்பேர் மேற்கு பகுதியிலும், அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அலெக்சாண்டரை ஆதரித்து இளங்கோ நகர் ஆபீசர் காலனி அருகிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
மற்ற செய்திகள்