'தமிழகத்தில் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கு'... 'இது எப்படி பட்ட ஆபத்து தெரியுமா'?... எச்சரித்துள்ள பிரதீப் கவுர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பொதுச் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார்.

'தமிழகத்தில் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கு'... 'இது எப்படி பட்ட ஆபத்து தெரியுமா'?... எச்சரித்துள்ள பிரதீப் கவுர்!

கொரோனாவால் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகளை நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் எனக் கட்டுப்பாடு வித்தது. இதனால் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியாகவில்லை. அதன் காரணமாகப் பார்வையாளர்கள் வருகையும் மிக மிகக் குறைவாக இருந்தது. மேலும் 400-க்கும் அதிகமான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் லலித்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக சினிமா துறையின் இழப்பு குறித்து விவாதித்தனர். அத்துடன் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். நடிகர் விஜய் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Closed spaces without social distancing are explosive spread of Covid

ஆனால் 1-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் திரையரங்கு இருக்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியீட்டு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது, இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுச் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர், ''மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா தொற்று வெடித்துப் பரவுவதற்கு நாமே ஏற்பாடு செய்தது போன்றதாகும். இதுபோன்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்

மற்ற செய்திகள்