'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தின் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்கினை பதிவு செய்தார்கள்.

'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில், திருமாவளவனின் சின்னமான பானையை ஒரு தரப்பினர் உடைத்துள்ளனர். அதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினரிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு பிரிவினர் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் மோதல் தீவிரமடைந்ததை அடுத்து 20கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.இதையடுத்து கலவரக்காரர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.பதற்றமான சூழ்நிலை நிலவுவதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.