'நடுரோட்டில்'.. ஏன் இந்த களேபரம்.. அப்படி என்ன நடந்தது.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் அவினாசி சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் வாகனங்கள் தணிக்கை  செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

'நடுரோட்டில்'.. ஏன் இந்த களேபரம்.. அப்படி என்ன நடந்தது.. பரபரப்பு வீடியோ!

அப்போது அங்கு குடிபோதையில் வந்த முரளி என்பவரின் வாகனமும் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால் முரளி மது அருந்தியிருந்ததால், அவரது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் குடிபோதையில் இருந்த முரளி டென்ஷனாகி, தன்னிடம் பேசிய போக்குவரத்துக் காவலரான பொன்னன்னன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றிப் போகவே, இருவருக்குமான கைகலப்பு உண்டானதால் முரளிக்கு அடிபட்டது. காவலர் பொன்னனுக்கும் சட்டையும் கிழியத் தொடங்கியது.  அதன் பின்னர் பொன்னன் நடக்கத் தொடங்கினார். ஆனாலு விடாமல், முரளி பொன்னனின் சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்ததால், அவர் தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

அதன் பின்னர் இருவரும் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்ப்பவர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

TIRUPPUR, VIDEOVIRAL, TRAFFICPC