'உடைக்கப்பட்ட சிலை'.. 'திகுதிகுவென எரிந்த கார்'.. கலவர பூமியான வேதாரண்யம்.. குவிந்த பாதுகாப்பு படை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேதாரண்யத்தில் காவல் நிலையம் முன்பு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'உடைக்கப்பட்ட சிலை'.. 'திகுதிகுவென எரிந்த கார்'.. கலவர பூமியான வேதாரண்யம்.. குவிந்த பாதுகாப்பு படை!

முன்னதாக, தேரோட்டம் காரணமாக, அங்கிருந்த அம்பேத்கர் சிலையை இடமாற்றம் செய்யக் கோரப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் காரில் வந்து, மற்றொரு தரப்பினரைத் தாக்கியதில் ராமச்சந்திரன், முருகேசன் ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், வந்த காரை தீவைத்து பற்றி எரியவிட்டதால், பொதுமக்கள் மேலும் அச்சத்துக்குள்ளாகினர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், அங்கு பற்றி எரிந்துகொண்டிருந்த காரின் நெருப்பை அணைத்தனர். இதனையடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் எஸ்,பிக்கள் இணைந்து, இருவேறு தரப்பினரிடையே நிகழ்ந்த கோஷ்டி மோதல் சாதிக்கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக உடைந்த அம்பேத்கர் சிலைக்கு மாற்றான பணியை அரசு சார்பில் உடனடியாக செய்துள்ளனர்.

போலீஸாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் அந்த சிலை அருகே பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கோவையிலும், விருத்தாசலத்திலும் அரசு பேருந்துகள் மீது கல்வீசியதாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

AMBEDKARSTATUE, BIZARRE, POLICE, RIOT