‘அடுத்த 20 நாள்’... ‘தலைமை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்’... ‘ஆனாலும் இது அவசியமில்ல’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா தீவிரம் குறையவில்லை என்றும், அதேசமயம் பொது ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த 20 நாள்’... ‘தலைமை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்’... ‘ஆனாலும் இது அவசியமில்ல’...!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்த கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது.

மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம். அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும். தொற்று குறைந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் தரப்படும்’ என்றார். மேலும், ‘தமிழகத்தில் பொது ஊரடங்குக்கு அவசியமில்லை என்றும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும்’ தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்