பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடாளுமன்றதை்தில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது பேசிய ராகுல்காந்தி, "உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால்(பாஜக) ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது." என்று மத்திய அரசான பா.ஜ.க. அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தை பெருமைப்படுத்தும் வகையில்  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் அது குறித்து எழுப்பிய கேள்விக்கு 'நான் ஒரு தமிழன்'  என்று அவர் பதில் அளித்துள்ளார்.

பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்

அவரின் இந்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ராகுல் காந்தியின் இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இந்நிலையில்,அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய கிளர்ச்சியூட்டும் உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சாரம் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Stalin thanks Congress MP Rahul Gandhi

இதனையடுத்து, மு.க.ஸ்டாலினின் ட்விட்டுக்கு ராகுல்காந்தி பதில் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி, 'தமிழ்நாடு மட்டுமல்லாமல் நமது நாட்டின் மற்ற அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள். தங்களின் கனிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்தியாவின் பன்மைத்துவ, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு யோசனையில் நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.

Chief Minister Stalin thanks Congress MP Rahul Gandhi

கடந்த 2021 ம் ஆண்டு ஈரோடு அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகத்துக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்தி பேசினார். அதில் 'நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன், நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும் மோடி அரசும் அவமதிப்பு செய்கிறது, இதை ஒருபோதும் ஏற்கமுடியாது. டெல்லியில் இருப்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை, மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தமிழில் பேசி ஏமாற்றுகிறார்கள்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Chief Minister Stalin thanks Congress MP Rahul Gandhi

MKSTALIN, RAHULGANDHI, CM MK STALIN, RAHUL GANDHI, TWITTER, PARLIAMENT, SPEECH, RAHUL GANDHI WISHES TAMILNADU PEOPLE, BJP, MODI

மற்ற செய்திகள்