'சார், சார், முதல்வரை பார்த்து பெண் கேட்ட கேள்வி'... 'அடுத்த செகண்ட் ஸ்டாலின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு மழை'... இணையத்தை கலக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் போது முதல்வரைக் காணப் பொதுமக்கள் பலரும் திரளாகக் குழுமியிருந்தார்கள்.

'சார், சார், முதல்வரை பார்த்து பெண் கேட்ட கேள்வி'... 'அடுத்த செகண்ட் ஸ்டாலின் முகத்தில் மலர்ந்த சிரிப்பு மழை'... இணையத்தை கலக்கும் வீடியோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள விமான தளத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் முதல்-அமைச்சரைக் காண்பதற்காகக் கூடியிருந்தனர்.

இதனிடையே  ஓசூர் உழவர் சந்தை அருகில் முதல்-அமைச்சரின் கார் மெதுவாகச் சென்ற போது, சாலையோரம் வந்த ஒரு பெண், முதல்-அமைச்சரின் காரை பார்த்து ‘சார், மாஸ்க்கை எடுங்க.... எப்ப சார் பார்க்கிறது உங்க முகத்தை.... மாஸ்க்கை எடுங்க சார், ஒரு டைம் பார்க்கிறோம். ஒரு செகண்ட் தான் சார். எப்ப பார்க்கிறது சார். ரொம்ப வருஷங்களா ரொம்ப ஆசையா இருக்கிறோம்’ என்று சத்தமாகக் கூறினார்.

Chief Minister Stalin obliges by taking off his mask during his visit

இதையடுத்து காரை நிறுத்த சொன்ன முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக கவசத்தைக் கழற்றி விட்டு அந்த பெண்ணிடம் புன்சிரிப்புடன் பேசினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி அதற்குப் பெயரே ஸ்டாலின் தான் சார் என்று அந்த பெண் தெரிவித்தார்.

Chief Minister Stalin obliges by taking off his mask during his visit

தொடர்ந்து அந்த பெண் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவை மு.க.ஸ்டாலின் வாங்கிக் கொண்டு காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் செயல் அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்