'அந்த ஏரியா மக்கள் இவங்க கிட்ட தான் ட்ரீட்மென்ட் எடுக்குறது...' 'படிச்சது பத்தாம் கிளாஸ்...' - பண்ணினது டாக்டர் வேலை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போலி மருத்துவர்களாக சுற்றிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
44 வயதான சங்கர் என்பவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேங்கான் தெருவில் வாழ்ந்து வருகிறார். வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் மருத்துவப் படிப்பு படிக்காமலே, அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஊசி போட்டு போலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
சங்கர் குறித்து அப்பகுதி மக்களில் சிலர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் இதுவரை அவர் பார்த்து வந்த மருத்துவம் தொடர்பான ஆவணங்களும், மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல் சிதம்பரம் அருகே விபீஷ்னபுரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதான திருஞானம் என்பவரும் வடக்கு வடுக தெருவில் மருத்துவமனை வைத்துக்கொண்டு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போட்டு வைத்தியம் பார்த்து உள்ளார். திருஞானம் என்பவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அடுத்தடுத்து சிதம்பரம் பகுதியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும், பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்