Chess Olympiad 2022 : அந்தரத்தில்.. மிதந்த படி ஒலித்த பியானோ இசை.. பிரம்மிக்க வைத்த இசைக் கலைஞர்.. வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மகாபலிபுரத்தில் வைத்து கடந்த ஜூலை மாதம், 28 ஆம் தேதி, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆரம்பமானது.
மேலும், இதன் தொடக்க விழாவில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும், பல பிரம்மாண்ட நிகழ்ச்சிகளும் நடந்திருந்தன.
இத்தனை நாட்கள் மிக சிறப்பாக நடந்து வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இன்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை (09.08.2022) நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ரவி, செஸ் விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவை போல, இன்றும் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தது. இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் உள்ளிட்டோர் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தனர். இதில், டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்த நிகழ்வு, இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்; இன்றைய நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்த படி, இசை கலைஞர் ஒருவர் பியானோவை வாசித்த நிகழ்வு, பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பியானோ இசை கலைஞரான வெளிநாட்டு பெண் ஒருவர், அந்தரத்தில் பறந்த படி, பியானோவை இசைக்க அங்கிருந்த அனைவரும், ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
இது தொடர்பான வீடியோவும், இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரையும் இந்த வீடியோ மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்