'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.

'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'!

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவத்திள் தாக்கத்தால், தற்போது தமிழகத்திலும் அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் நோயால் தமிழகத்தில் மட்டும் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.

அதில் தமிழகத்தில் தலைநகரமான சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் 15  மண்டலத்தில், ராயப்புரத்தில் மட்டும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக, திரு.வி.க. நகர் மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதியில் மொத்தமாக 14 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடமாக கோடம்பாக்கத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனாம்பேட்டையில் 10 பேர், தண்டையார்பேட்டையில் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னை மண்டலத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் மணலி பகுதியில் மட்டும் எந்தவித கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை.