காதலியுடன் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான கடிதம்.. இறுதியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : கடைசியாக காதலி பார்த்துச் சென்ற நிலையில், அதன்பிறகு இளைஞர் எடுத்த விபரீத முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரத்தை அடுத்த பெரிய தெரு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் பெயர் அர்ஜுன். இவருடைய வயது 23.
அர்ஜுனின் பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில், அவர் மட்டும் தனியாக சென்னையில் வசித்து வந்துள்ளார். மேலும், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் நண்பன்
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில், அர்ஜுனின் நண்பர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவர் நீண்ட நேரம் கதவு தட்டியதாக கூறப்படுகிறது. இருந்த போதும்,, அர்ஜுன் கதவை திறக்காத காரணத்தினால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது, அவர் கண்ட காட்சியால், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.
அர்ஜுன் தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது நண்பர், அங்கேயே துடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், அர்ஜுனின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உருக்கமான கடிதம்
இதனைத் தொடர்ந்து, அர்ஜுன் வீட்டில் பரிசோதனை மேற்கொண்டதில், ஒரு கடிதமும் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், 'எனக்கு வாழ பிடிக்கவில்லை. எல்லோரும் இருந்த போதும், நான் தனியாக இருப்பதாக உணர்கிறேன். என்னால் வாழ முடியாது. என் வாழ்க்கை அப்படியே இருக்கிறது. அதனால், நான் இந்த முடிவை எடுத்தேன். என் முடிவிற்கு யாரும் காரணமில்லை' என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல, தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல், பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணை
இதன் ஆரம்ப கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக அர்ஜுனுக்கு சரிவர வேலை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர் ஒரு இளம்பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், நேற்று மாலை, சுமார் 5 மணியளவில், அவர் அர்ஜுனை பார்க்க வீட்டிற்கு வந்து சென்றதாகவும், விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்ஜுனின் மரணத்திற்கு பின்னர், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்