‘கழுத்துல தாலி ஏறப்போகுது.. என்னை கூட்டிட்டு போ’ - காதலி தட்டிவிட்ட மெசேஜ்.. சினிமா பாணியில் காதலன் கொடுத்த எண்ட்ரி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திரைப்படங்களில் நடப்பதற்கும் எதார்த்த வாழ்வில் நடப்பதற்கும் எப்போதுமே சம்பவங்கள் மிக நெருக்கமாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.

‘கழுத்துல தாலி ஏறப்போகுது.. என்னை கூட்டிட்டு போ’ - காதலி தட்டிவிட்ட மெசேஜ்.. சினிமா பாணியில் காதலன் கொடுத்த எண்ட்ரி.!

Also Read | "நேத்து அவருகிட்ட பேசுறப்பவே".. சதமடிப்பதற்கு ஒரு நாள் முன் ABD கிட்ட பேசுன கோலி.. வைரலாகும் ட்வீட்!!

சில வேளைகளில் எதார்த்த வாழ்வில் இருப்பதைதான் சினிமாக்களில் சற்றே சினிமா தனம் கலந்து காட்சிப்படுத்துகிறார்கள். இதேபோல் சினிமாவில் வரக்கூடிய காட்சிகளையும் சிலர் எதார்த்த வாழ்க்கையில் முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு. அப்படி ஒரு திருமணத்தை சினிமாவில் வரக்கூடிய கிளைமாக்ஸ் பாணியில் கடைசி நிமிடத்தில் சென்று காதலன் ஒருவர் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதற்கு காரணம் , அவருடைய காதலி அவருக்கு அனுப்பிய மெசேஜ்தான்.. கேட்பதற்கே வேற லெவலில் இருக்கும் இந்த சம்பவம் சென்னையில்தான் நடந்திருக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டையில் இளம்பெண் ஒருவருக்கு, திடீரென வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து விட்டது. இதனை தொடர்ந்து செய்வது அறியாத அந்த இளம் பெண் இருந்துள்ளார். பின்னர் தன்னுடைய காதலருக்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். அதில் தனக்கு திருமணம் என்றும், தன் காதலரை வந்து அழைத்துப் போகுமாறும் காதலருக்கு தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார் அந்த இளம் பெண். 

chennai youth stops brides marriage last min like cinema

இதனைத் தொடர்ந்து திருமணத்தன்று காலையில் பார்வையாளர் போல திருமணத்திற்கு வருகை தந்த அப்பெண்ணின் காதலர், அப்பெண்ணின் கழுத்தில் தாலியேறப்ப்போகும் முன்பாக சென்று தாலியை தட்டி விட்டு திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதனை பார்த்த அங்கிருந்து சிலர் அந்த இளைஞரை அடிக்க பாய்ந்து விட்டனர். ஆனால் பிறகு அங்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார் இது குறித்து அந்த இளைஞரையும், அடிக்கவந்தவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போதுதான் அந்த இளைஞரும் மணப்பெண்ணும் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருவதும், அவர்களுக்கு இடையில் ஒரு வருடமாக காதல் உறவு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மெசேஜில்  அவருடைய காதலி அனுப்பிய வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் வந்து இந்த திருமணத்தை தடுத்து இருக்கிறார் என்றும் தெரியவந்தது.

Also Read | 71 ஆவது Century அடித்த கோலி.. உடனே மைதானத்தில் இருந்த வயதான ரசிகர் செய்த காரியம்.. இணையத்தை வென்ற வீடியோ!!

MARRIAGE, CHENNAI

மற்ற செய்திகள்