அய்யா, என் மகன காணோம்.. அழுது புலம்பிய பெற்றோர்.. போன் சிக்னல் வெச்சு டிரேஸ் பண்ணி பாத்தப்போ தான் பெரிய ட்விஸ்ட்டே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : இளைஞர் ஒருவர் காணாமல் போனதன் பெயரில், நடத்திய விசாரணையில் பல எதிர்பாரா சம்பவங்கள் நடந்துள்ளது.

அய்யா, என் மகன காணோம்.. அழுது புலம்பிய பெற்றோர்.. போன் சிக்னல் வெச்சு டிரேஸ் பண்ணி பாத்தப்போ தான் பெரிய ட்விஸ்ட்டே

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா (வயது 54). இவர் கடந்த சில தினங்களுக்கு முன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய இளைய மகனான கிருஷ்ணபிரசாத் (வயது 24), உறவினர் ஒருவருடன் வடபழனியில் அமைந்துள்ள மால் ஒன்றிற்கு சென்றதாகவும், அப்போது அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாகவும் கூறினார்.

மகனைக் காணவில்லை

தொடர்ந்து, அவர்கள் தனக்கு அழைத்து 30 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தரவில்லை என்றால், மகனை கொலை செய்து விடுவதாக மேலும் மிரட்டுவதாகவும், தன்னுடைய புகாரில் பென்சிலய்யா குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும் என வேதனையுடன் அவர் போலீசாரிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.

தேடுதல் வேட்டை

இதனைத் தொடர்ந்து, வடபழனி காவல் உதவி ஆணையர் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, சைபர் க்ரைம் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தின் அழைப்பு மற்றும் பிற விவரங்களை ஆய்வு செய்த போது, அவரின் செல்போன், தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில், இயங்கி வருவது தெரிந்தது.

chennai youth makes his own kidnapping as drama warned by police

அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து, செகந்திராபாத் சென்ற போலீசார், அங்குள்ள போலீசார் உதவியுடன், கிருஷ்ண பிரசாத் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, இளைஞரை சென்னைக்கு மீட்டு வந்தனர். அப்போது, இளைஞரை விசாரித்ததில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. இதில், கிருஷ்ண பிரசாத்தை யாரும் கடத்தவில்லை என்பது உறுதியானது.

நாடகம் அம்பலம்

தன்னைக் கடத்தியதாக நாடகமாடி, வீட்டில் இருந்து பணம் பறிக்க வேண்டித் தான், கிருஷ்ண பிரசாத் இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பி.ஏ பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், சரியான வேலை எதுவும் கிருஷ்ண பிரசாத்திற்கு அமையவில்லை. பிறகு, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், தான் குறும்படம் எடுப்பதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கியும் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

chennai youth makes his own kidnapping as drama warned by police

அரங்கேற்றம்

தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்த கிருஷ்ண பிரசாத், தனது தந்தையிடம் பணம் வாங்கி, கடனை அடைத்து விடலாம் என்ற தவறான நோக்கில் தான், கடத்தல் நாடகத்தை கிருஷ்ண பிரசாத் அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தன்னுடன் மாலுக்கு வந்த உறவினர் மகனிடம், தான் அருகே சென்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தனியார் விடுதி

தொடர்ந்து, தன்னைக் கடத்திச் சென்றதாக உறவினர் மகனுக்கு அழைத்து, நாடகமாடியுள்ளதும் தெரிய வந்தது. இதன் பிறகு, கோயம்பேட்டில் இருந்து, ஆந்திர மாநிலம் சென்ற கிருஷ்ண பிரசாத், அங்கிருந்து பின் செகந்திராபாத் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனியார் விடுதி ஒன்றில் தங்கியவர், பெற்றோருக்கு அழைத்து, பணம் கேட்டு மிரட்டுவதாக அழுது கொண்டே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் எச்சரிக்கை

இதன் பிறகு நடந்த போலீஸ் விசாரணையில் தான், இளைஞர் பணத்திற்காக மேற்கொண்ட நாடகம் அம்பலமானது. இளைஞரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என போலீசார் எச்சரித்தனர். கிருஷ்ண பிரசாத்தை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் வைத்தே அடித்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

CHENNAI, KIDNAP, PARENTS, YOUTH

மற்ற செய்திகள்