'இதெல்லாம் எவ்ளோ பெரிய ரிஸ்க்...' 'செல்போனை எடுத்திட்டு பாலம் அருகே சென்ற IT ஊழியர், திடீர்னு...' - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளுக்கு நாள் செல்பி மோகம் இளைஞர்களிடயே வெறும் ஆர்வம் என்பதை தாண்டி அது ஒரு உளவியல் சிக்கலாக மாறும் அளவிற்கு போகிறது. இதனால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பல விபத்துகள் நேர்ந்ததும் உண்டு.
இதேபோன்று, சென்னையில், செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரைத் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மூர்த்தி என்னும் நபர் நேப்பியர் பாலம் அருகே செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். தகவல் அறிந்து உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளைஞரை மீட்டனர்.
கூவம் ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்ற முடிந்தது. அந்த நபரை இதுபோன்ற விபரீதத்துக்குரிய செயலில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்