'பேங்க்ல இருந்து பேசுறேன் சார்...' 'OTP நம்பர் கொஞ்சம் சொல்றீங்களா...' - நம்பிகையோட சொன்னவருக்கு நடந்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்னும் இளைஞர் ஒருவர் தான் எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரை செல்போனில் தொடர்புக்கொண்ட கார்த்திகேயன் என்னும் இளைஞர், தான் எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரின் கிரெடிட் கார்டை மாற்றித் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகேயனின் பேச்சை நம்பிய இருதயராஜ் அவரின் கிரெடிட் கார்டு நம்பர் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் பெற்று, அவரின் செல்போன் நம்பருக்கு வந்த ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். அதையடுத்து இருதயராஜ் வங்கிக்கணக்கில் இருந்து, 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கார்த்திகேயன் மோசடி செய்து விட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்த இளைஞரான கார்த்திகேயன் வளசரவாக்கம் தனியார் வங்கி கிளைக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த பகுதியில் இருக்கும் 25 சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும், இருசக்கர வாகன எண்ணை வைத்து கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்