‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் கேஸ் சிலிண்டர் டியூபை வாயில் சொருகி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேந்தவர் கார்த்திக் (30). ரயில்வே ஊழியராக வேலை செய்துவந்த கார்த்திக்கிற்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த ஒராண்டாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதற்காக அவர் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் அவர் மனமுடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிக்கொண்டு, கேஸ் சிலிண்டர் ட்யூபை வாயில் சொருகி கார்த்திக் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுபற்றி கார்த்திக்கின் சகோதரி போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து அங்கு சென்ற அவர்கள் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.