கைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் சிறை கைதியை பார்க்க வந்த இளம்பெண் பிஸ்கட்டுக்குள் கஞ்சா கடித்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் தனிக்கிளைசிறை அமைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எண்ணூரில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் என்பவர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை பார்ப்பதற்காக நேற்று மாலை அவரது உறவுக்காரப் பெண் வளர்மதி (21) என்பவர் வந்துள்ளார். அப்போது அவர் பிஸ்கட், பழம் ஆகியவற்றை உடன் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவர் கொண்டு வந்த பொருட்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது பிஸ்கட்டை துளியிட்டு அதற்கு கஞ்சாவை கடத்தி வந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

Chennai young woman who bring marijuana to jail got arrested

இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிஸ்கட்டுக்குள் வைத்து 50 கிராம் கஞ்சாவை கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசாரிடம் சிறைகாவலர்கள் ஒப்படைத்தனர். கைதியை பார்க்க வந்த பெண் பிஸ்கட்டுக்குள் மறைத்து கஞ்சா கடித்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்