கல்யாணமாகி 1 வருஷம் தான்... இரவு-பகல் தொடர்வேலை... கணவரிடம் 'உதவி' கேட்ட மனைவி... மறுத்ததால் விபரீத முடிவு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னுடைய கணவரிடம் உதவி கேட்டு அவர் மறுத்த நிலையில் விபரீத முடிவெடுத்துள்ளார்.

கல்யாணமாகி 1 வருஷம் தான்... இரவு-பகல் தொடர்வேலை... கணவரிடம் 'உதவி' கேட்ட மனைவி... மறுத்ததால் விபரீத முடிவு?

ஊட்டியை சேர்ந்த ஹரி கணேஷ்(29) பிரியதர்ஷினி(29) இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. ஹரி கணேஷ் அம்பத்தூரிலும், பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கியில் மேலாளராகவும் பணியாற்றி வந்தார். இருவரும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்துள்ளனர்.

சம்பவ தினமான நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும் போது கணவர் ஹரிகணேஷிடம், பணியின் காரணமாக உதவி கேட்டதாக தெரியவருகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் பிரியதர்ஷினி தூங்குவதற்காக தனி அறைக்கு சென்றுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்து ஹரி கணேஷ் கதவை உடைத்து பார்த்தபோது பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் வேலைப்பளு காரணமாக பிரியதர்ஷினி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 வருடம் தான் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்