'எங்க பையன் ஐடி என்ஜினீயர்'... 'கேட்டது 140 பவுன் ஆனா போட்டது?'... 'தினம் தினம் ரணமான வார்த்தைகள்'... 'சென்னையில் இளம் எம்பிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கொடுமை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாம் கற்கும் கல்வி என்பது சமுதாயத்தில் காலம் காலமாக நிலவும் சில மடமைகளை உடைத்தெறியப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அந்த கல்வியையே ஆயுதமாக வைத்து அந்த மடமைகளைத் தூக்கிப் பிடிக்க முயல கூடாது. அவ்வாறு செய்யும் போது நடக்கும் எதிர்வினை என்பது மற்றவரது வாழ்க்கையில் எதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

'எங்க பையன் ஐடி என்ஜினீயர்'... 'கேட்டது 140 பவுன் ஆனா போட்டது?'... 'தினம் தினம் ரணமான வார்த்தைகள்'... 'சென்னையில் இளம் எம்பிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கொடுமை'!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. இளம் எம்பிஏ பட்டதாரியான பிரியங்காவிற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்து மேட்ரிமோனி மூலம் வரன் தேடியுள்ளார்கள். அப்போது சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவரது வரன் பிடித்துப் போக, அவரை பிரியங்காவிற்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். நிரோஷ்குமார் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் கடந்த 2019 ஜூலை மாதம் நடைபெற்றது. ஆனால் திருமணமான இரண்டு மாதங்களில் இருவருக்குப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரியங்கா தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. திருமணத்தின் போது 140 சவரன் நகை போடுவதாகச் சொல்லப்பட்டதாகவும் ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Chennai : Young girl commits suicide due to dowry harassment

இதனால் இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரியங்காவின் பெற்றோர் மீதி நகையைப் போட்டுவிடுவதாகக் கூறி நிரோஷ் குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சமாதானம் செய்து வந்துள்ளார்கள். ஆனால் அவரது குடும்பத்தினர் மொத்த நகையையும் போட வேண்டும் எனத் தினமும் வார்த்தைகளால் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருந்த பிரியங்கா தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கிடையே சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் நிரேஷ் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது உண்மையானதால், சாப்ட்வேர் என்ஜினியர் நிரேஷ் குமார் மீது வரதட்சணை கொடுமையால் மரணம் விளைவித்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். வரதட்சணை கொடுமையால் வாழவேண்டிய வயதில் இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்