இது ‘வேறலெவல்’ ஐடியாவா இருக்கே.. திருட வந்த கொள்ளையர்களுக்கு ‘தண்ணீ’ காட்டிய சென்னை இல்லத்தரசி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் திருடர்களிடமிருந்து நகைகை பாதுகாக்க இல்லத்தரசி கையாண்ட விதம் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி தன் மனைவியின் சொந்த ஊரான ஓசூருக்கு தேவராஜன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவராஜின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அப்போது வீட்டிருந்த 4 பீரோக்களை உடைத்து நகைகள் இருக்கிறதா என தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் பீரோவுக்குள் ஒரு குண்டுமணி நகை கூட இல்லாததால் வெறுங்கையுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து நேற்று தேவராஜனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அவர் வீட்டுக்குள் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போதுதான் மனைவி சங்கீதா 31 பவுன் தங்க நகைகளை பித்தளை பாத்திரங்களுக்குள் பத்திரமாக மறைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. வெளியூர் செல்வதால் திருடர்களிடமிருந்து நகைகளை பாதுகாக்க சங்கீதா இந்த அசத்தலான ஐடியாவை பின்பற்றியுள்ளார்.
இதுகுறித்து கூறிய சங்கீதா, ‘கொள்ளையர்களிடம் இருந்து நகைகள் தப்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் தங்கள் வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களை பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் தனது மனைவி சங்கீதாவை கணவர் தேவராஜன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மற்ற செய்திகள்