"உடற்பயிற்சி’லாம் கிடையாது'... 'உங்க எடையை குறைக்க 'ஹெல்ப்' பண்றோம்'... ஆனா, 'இந்த மாதிரி' ஒரு வீடியோ மட்டும்"... - 'சென்னை பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உடல் எடையை குறைப்பதாக பேஸ்புக்கில் ஆசைகாட்டி இளம்பெண்களிடம் இருந்து புகைப்படங்கள், வீடியோக்களை பெற்று மிரட்டிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

"உடற்பயிற்சி’லாம் கிடையாது'... 'உங்க எடையை குறைக்க 'ஹெல்ப்' பண்றோம்'... ஆனா, 'இந்த மாதிரி' ஒரு வீடியோ மட்டும்"... - 'சென்னை பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!'...

பேஸ்புக்கில் அனிஷ் ஷா என்ற பெயரில் செயல்பட்டு வரும் பக்கம் ஒன்று பெண்களுக்கு தேவையான அழகுக் குறிப்புகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளது. இதனால், கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் அந்த பக்கத்தை பின்தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் உடற்பயிற்சியே செய்யாமல் எடையை குறைக்க வாட்ஸ் அப் மூலமாக பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறி கட்டணம் ரூ 1,000 முதல் ரூ 3,000 வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பெண்கள் பலரும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி பயிற்சியில் சேருவதாகக் கூறியுள்ளனர். பின்னர் அதில் சேர்ந்துள்ளவர்களின் உடலமைப்பு  குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கூறி முதலில் முழு உருவ போட்டோ, வீடியோவை அனுப்புங்கள் என அவர்கள் கேட்க பலரும் அனுப்பியுள்ளனர். பின்னர் உடைகள் சரியாக அணியாத நிலையிலும் சிலர் புகைப்படங்களை அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பலரிடம் இருந்தும் புகைப்படங்கள், வீடியோக்களை வாங்கிய அவர்கள் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன்பிறகு உடனடியாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் போலீசாரிடம் புகார் அளித்ததும் அந்த பேஸ்புக் பக்கத்தில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வாட்ஸ்அப் எண் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்