'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை, திருவள்ளூர், கும்பகோணம் மற்றும் பல மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது.

'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு?

சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவியது. இதனால் மக்கள் மலையை எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நேற்று இரவு முதலே சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் முழுவதுமாக தணிந்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதனிடையே வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் திசை மாறுதல் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் சேலம் வாழப்பாடியில் மழை பெய்து வருகிறது. தென் தமிழக பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்'' என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வேலூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், நாகப்பட்டினத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார்.

WEATHER, RAIN, HEAVYRAIN, CHENNAI