தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், காய்கறிகளின் கையிருப்பு குறைந்ததாலும் விலை கடுமையாக உயர்ந்தது.

மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு பெட்டி தக்காளி, 500 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு மூட்டை 1500 ரூபாயாகவும் உயர்ந்தது.

சில்லறை விற்பனையிலும் அனைத்து காய்கறிகளும் கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்ந்தது.

விலை பட்டியல் (ஒரு கிலோ)

பீட்ரூட்: நேற்று - 30, இன்று - 75

பீன்ஸ்: நேற்று - 180, இன்று - 300

காலிஃபிளவர்: நேற்று - 30, இன்று - 60

உருளைக்கிழங்கு: நேற்று - 25, இன்று - 45

கத்தரிக்காய்: நேற்று - 30, இன்று - 80

முட்டைக்கோஸ்: நேற்று - 25, இன்று - 90

பெரிய வெங்காயம்: நேற்று - 30, இன்று - 50

சின்ன வெங்காயம்: நேற்று - 40, இன்று - 80

தக்காளி: நேற்று - 15, இன்று - 60

chennai vegetables price shoot up koyambedu market

மற்ற செய்திகள்