"அண்ணே, ஒரு கிலோ சாம்பிள் 'அரிசி' குடுங்க"... இந்தா 'ATM' வர போயிட்டு வரோம்... 'வடிவேலு' பாணியில் கல்லா பெட்டியை குறி பார்த்த 'கும்பல்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தரமணி அருகே வடிவேலு பட பாணியில் அரிசிக் கடைக்கு வந்த நபர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தரமணியில் அரிசி கடை நடத்தி வருபவர் சந்திரன். இவருடைய கடைக்கு அரிசி வாங்குவது போல் நேற்று இரண்டு நபர்கள் வந்துள்ளனர். கடைக்கு வந்த அந்த நபர்கள் அங்கிருந்த அனைத்து அரிசியையும் வடிவேல் சாம்பிள் வாங்கி பார்ப்பது போல வாங்கி சுவைத்துள்ளனர். அப்படி கடைக்காரர் கொடுக்கும் அரிசியை நன்றாக இல்லை எனக்கூறி அனைத்து வகை அரிசிகளையும் வாங்கி பார்த்துள்ளனர்.
சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் எல்லா அரிசி வகைகளையும் சாம்பிள் பார்த்த நிலையில், கடைசியாக மூன்று மூட்டை அரிசிகளை இரண்டு பேரும் வாங்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது கையில் போதிய பணமில்லை என்றும், அருகிலுள்ள ATM'இல் சென்று காசு எடுத்து விட்டு வருவதாகவும் கூறி அங்கிருந்து சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் இருவரும் திரும்பி வராத நிலையில், கடையை அடைத்து விட்டு சந்திரன் கல்லா பெட்டியை பார்த்த போது தான் அதிலிருந்த சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரிய வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தொடர்ந்து, அந்த மர்ம ஆசாமிகளை அந்த பகுதி முழுக்க தேடியுள்ளார். அவர்களை எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், போலீஸ் நிலையம் சென்று புகாரளித்துள்ளார். இது தொடர்பாக, அந்த இரண்டு திருடர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்