'பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த 'தினகரன்'... 'அவர் போட்டியிடும் தொகுதி'... வெளியானது அமமுக வேட்பாளர் பட்டியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமமுக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்ட நிலையில் தற்போது 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே அமமுக, தேமுதிகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மார்ச் 12-ம் தேதி அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இல்லாமல் அவர் கோவில்பட்டியைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதனிடையே கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் களம் காண்கிறார். தேர்தலுக்குப் பின்னர் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றாக இணைவோம் எனத் தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/cgcTNqnkHS
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
மற்ற செய்திகள்