VIDEO: ‘இறந்துட்டார்ன்னு நெனச்சுதான் தூக்குனோம்.. அப்பறம்தான் தெரிஞ்சது..!’ மக்கள் மனதை வென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கல்லறை ஒன்றில் மயங்கி கிடந்த இளைஞரை காப்பாற்றியது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

VIDEO: ‘இறந்துட்டார்ன்னு நெனச்சுதான் தூக்குனோம்.. அப்பறம்தான் தெரிஞ்சது..!’ மக்கள் மனதை வென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பேட்டி..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதேபோல் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மீட்புப்பணிகளில் மாநகராட்சி ஊழியர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

Chennai TP Chatram Police Station inspector Rajeshwari interview

அந்த வகையில் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் உதயா என்ற இளைஞர் மயக்கமடைந்து கிடந்துள்ளார். முதலில் அவர் இறந்துவிட்டார் என கருதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞர் உதயாவை தூக்கியுள்ளார். அப்போது அவர் மூச்சு விடும் சத்தம் கேட்கவே, உடனே தனது தோளில் தூக்கி மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Chennai TP Chatram Police Station inspector Rajeshwari interview

இந்த நிலையில், இளைஞர் உதயாவை காப்பாற்றியது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறத்திக் கொண்டிருக்கும்போது, கல்லறையில் ஒன்றில் வாலிபர் சடலம் இருக்கிறது என போன் வந்தது. உடனே நானும் காவலர் அய்யனாரும் அவரது பைக்கில் வேகமாக அங்கு சென்றோம். அங்கு சுவர் ஓரமாக அந்த இளைஞர் சடலம் போல் கிடந்தார். இறந்துவிட்டார் என்று நினைத்து நானும் காவலர் அய்யனாரும் அவரை தூக்கினோம்.

Chennai TP Chatram Police Station inspector Rajeshwari interview

அப்போது அவர் மூச்சு விடும் சத்தம் கேட்டது. உடனே அவரை எப்படியாவது காப்பாத்தி விடவேண்டும் என தோளில் தூக்கிக்கொண்டு போனேன். அப்போது ஜீப் சம்பவ இடத்துக்கு வந்துட்டது. ஆனால் அதற்கு முன்பே காவலர் ஒருவர் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்துவிட்டார். அதனால் உடனே ஆட்டோவில் ஏற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து இளைஞரை காப்பாற்றினர்’ என காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

Chennai TP Chatram Police Station inspector Rajeshwari interview

இந்த நிலையில் இன்று (12.11.2021) காலை இளைஞர் உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கே.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

POLICE, TAMILNADUPOLICE, RAJESHWARI, CHENNAIRAINS

மற்ற செய்திகள்