நாடு முழுவதும் 'பாஸ்டாக்' அமல்.. ஆனா 'சென்னைக்கு' மட்டும் கெடையாது.. ஏன்?.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் வருகின்ற 15-ம் தேதி முதல் பாஸ்டாக் முறை சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகிறது. காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், சுங்கச்சாவடி கட்டணத்தை எளிமையாக செலுத்தும் பொருட்டும் பாஸ்டாக் முறையை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

நாடு முழுவதும் 'பாஸ்டாக்' அமல்.. ஆனா 'சென்னைக்கு' மட்டும் கெடையாது.. ஏன்?.. என்ன காரணம்?

இந்தநிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறை செயல்படுத்தப்படாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பெருங்குடி, சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை வழக்கமான முறையில் நேரிடையாக டோல்களில் கட்டணம் செலுத்திய பிறகு பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதிகள் மாநில நெடுஞ்சாலைகள் இருக்கக்கூடிய பகுதிகள் என்பதால் பாஸ்டாக் முறை இங்கு செயல்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் பாஸ்டாக் முறையை இங்கு செயல்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் வாகனங்கள் இப்பகுதிகளில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.