சென்னைவாசிகளே ஒன்றல்ல மூன்று பாலங்கள்... இனி ஈஸியா போயிட்டு வரலாம்... வெளியான செம்ம அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்கள் தொகை கூடுவதால், வாகனப் புழக்கமும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக கொரோனா நோய்ப் பரவலைத் தொடர்ந்து பல நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சொந்தமாக இரு சக்கர வாகனமோ, வசதி இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனமோ வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

சென்னைவாசிகளே ஒன்றல்ல மூன்று பாலங்கள்... இனி ஈஸியா போயிட்டு வரலாம்... வெளியான செம்ம அறிவிப்பு!

இதனால் மக்களின் பயணம் இலகுவாக மாறியிருந்தாலும், டிராஃபிக் நெரிசல் அதிகமாகியுள்ளது. இதைக் கணக்கில் கொண்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மூன்று இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

chennai to get 3 new flyovers to manage the heavy traffic

இது குறித்த அறிவிப்பு திடீரென்று வெளியிடப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட முதல் இடைக்கால பட்ஜெட்டிலேயே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பாலங்கள் கட்டுவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் புதியப் பாலங்களுக்காக மொத்தம் 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

chennai to get 3 new flyovers to manage the heavy traffic

இதில் முதலாவது மேம்பாலம் வியாசர்பாடியில் 142 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது. இந்தப் பாலம் வியாசர்பாடியின் கணேசபுரம் அருகில் அமைய உள்ளது. இந்த மேம்பாலமானது 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில் கட்டப்பட இருக்கிறது.

இரண்டாவது பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. இந்த மேம்பாலம் 8.4 மீட்டர் அகலத்தில் 508 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ளது. கொன்னூர் நெடுஞ்சாலை என்பது வில்லிவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

chennai to get 3 new flyovers to manage the heavy traffic

கடைசி மேம்பாலம் தியாகராய நகரின் தெற்கு உஸ்மான் சாலை - சிஐடி நகர் முதல் பிரதான சாலைக்கு இடையே அமைய உள்ளது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு 131 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த பாலமானது 120 மீடர் நீளத்துக்கு 8.4 மீட்டர் அகலத்திற்குக் கட்டப்பட உள்ளது. அனைத்து மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன.

சென்னை, சென்னை மேம்பாலங்கள், திநகர், புதிய மேம்பாலங்கள், CHENNAI FLYOVERS, CHENNAI TRAFFIC

மற்ற செய்திகள்