'மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா'... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மியாட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்