'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'?... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'?... தமிழக அரசு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்திற்கான நடைமுறைகள் குறித்தும், திருமணத்தில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

'ஆகஸ்ட் மாதம் முதல் திருமண நடைமுறைகளுக்கு விலக்கா'?... 'எத்தனை பேர் பங்கேற்கலாம்'?... தமிழக அரசு விளக்கம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஊரடங்கு தொடர்ந்து அமலிலிருந்து வருகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு போடப்பட்ட ஊரடங்கு இன்று 'நிறைவுக்கு வருகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆகஸ்ட் மாதம் போடப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணத்திற்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவியது. இதையடுத்து தமிழக அரசு திருமண நடைமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதன்படி, ''திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும். திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்'' எனத் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மற்ற செய்திகள்