'அதிகரிக்கும் கொரோனா'... 'இந்த மாவட்டங்கள் தான் ரொம்ப சவாலா இருக்கு'... ராதாகிருஷ்ணன் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காரணமாக நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

'அதிகரிக்கும் கொரோனா'... 'இந்த மாவட்டங்கள் தான் ரொம்ப சவாலா இருக்கு'... ராதாகிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Chennai, Tirunelveli, Tuticorin have high test positivity rates

அப்போது, ''கோவிட் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,501 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தச் சொல்கிறோம். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற எண்ணத்தில் மக்கள் இருக்க வேண்டாம். இதனை உங்கள் கடமையாக நினைத்தால்தான் தொற்று பாதிப்பை வேகமாகக் குறைக்க முடியும்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்கள் இன்னும் நமக்குச் சவாலாகத்தான் உள்ளன. சென்னை, ராணிப்பேட்டை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யும் விகிதம் அதிகமாக இருக்கிறது.

Chennai, Tirunelveli, Tuticorin have high test positivity rates

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களும் நமக்குச் சவாலாக உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதோடு மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்'' என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்