மாசத்துக்கு ஒரு திருட்டு.. கொள்ளையடித்த பணம், நகை கொண்டு ஆதரவற்றோருக்கு உதவிய நபர்.. சென்னை கொள்ளையனின் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நபர் ஒருவர் மாதத்திற்கு ஒருமுறை கொள்ளையடித்து வந்த நிலையில், அதன் பிறகு அவரை குறித்து தெரிய வந்த தகவல், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாசத்துக்கு ஒரு திருட்டு.. கொள்ளையடித்த பணம், நகை கொண்டு ஆதரவற்றோருக்கு உதவிய நபர்.. சென்னை கொள்ளையனின் பின்னணி!!

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த புது பெருங்குளத்தூர், ஸ்ரீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வரதராஜன் (வயது 55).

இவருக்கு உடல்நல குறைவு இருந்து வந்த நிலையில், இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வரதராஜன், அங்கே வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்த போது அங்கே பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை உள்ளிட்ட பொருட்களும் காணாமல் போனதை அறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்தும் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் வரதராஜன். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடம் சென்று விசாரணையும் மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனி ஒரு ஆளாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று கொள்ளை அடித்து சென்றதும் தெரிய வந்தது.

மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்கள் கொண்டு சோதனை செய்த போது, எக்மோர் பகுதியில் சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கிற அப்பு என்பது தெரிய வந்தது. இவர் மாதம் ஒரு முறை மட்டும் ரெயில் மூலமாக வந்து கொள்ளையடித்து செல்லும் பழக்கம் உடையவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, எக்மோர் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களாக நோட்டமிட்டு அப்புவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருங்குளத்தூர் பகுதியில், நான்கு மாதங்களில் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் அவர் கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் கொள்ளையடித்த நகைகள் குறித்து பாபுவிடம் கேட்ட போது, அதனை விற்று சாலையோரம் மற்றும் ரயில் நிலையங்களில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக திருடி சிறை செல்வதில் தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அப்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

CHENNAI, THIEF

மற்ற செய்திகள்