வெளியிடப்படாத வீடியோக்கள்!.. செல்போனில் ஒளித்துவைத்து... தோண்ட தோண்ட வெளிவரும்... யூடியூப் சேனலின் கோர முகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் செல்பேசியில், வெளியிடப்படாத பல பெண்களின் வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

வெளியிடப்படாத வீடியோக்கள்!.. செல்போனில் ஒளித்துவைத்து... தோண்ட தோண்ட வெளிவரும்... யூடியூப் சேனலின் கோர முகம்!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சி மற்றும் கடற்கரையை பார்க்க வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு, சென்னை டாக் என்ற யூடியூப் சேனல் தொந்தரவு செய்வதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

இதனடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை செய்ததில் பெசன்ட் நகர் கடற்கரையில், அடிக்கடி பெண்களை வற்புறுத்தி ஆபாசமாக பேட்டி எடுப்பதாக தெரியவந்தது.

இதனையடுத்து பெசன்ட்நகர் நகர் ஊரூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் பாட்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய 3 பேர் மீது, பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் பெண்களை மானபங்கப்படுத்தும் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதனிடையே, News 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை டாக்ஸ் குழுவினரிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் பதியப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் தனியாக பீச்ச்சில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்டு அதை மொபைலில் பத்திரபடுத்தி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆபாசமாக வீடியோக்கள் வெளியிடப்பட்ட சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்