‘சுபஸ்ரீ பலியான வழக்கு’... ‘அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

‘சுபஸ்ரீ பலியான வழக்கு’... ‘அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்’!

கடந்த 10 தினங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் டூ வீலரில் சென்றுக் கொண்டிருந்த இளம் பெண்  சுபஸ்ரீ மீது, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், அவர் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், இதுவரை கைது செய்யப்படாததற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கில், காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேனர் வைக்கமாட்டோம் என அதிமுக பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

SUBHASREE, HIGHCOURT