இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல மாநிலங்கள், இதன் பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு பக்கம் கொரோனா தொற்றும் வேகம் எடுக்க, மறுபக்கம் ஒமைக்ரான் தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் இதன் பரவல் பன்மடங்கு பெருகி வரும் நிலையில், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, இதுகுறித்த அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
தமிழக அரசின் கட்டுப்பாடுகள்
நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) அமல்படுத்தப்பட்டது. அதே போல, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பலவற்றிற்குமான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
மக்களுக்கு வேண்டுகோள்
மேலும், முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல, வெளியூர்களுக்கு செல்ல பேருந்து போக்குவரத்தும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேவை இல்லாமல், பொது இடங்களில் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புறநகர் ரெயில்கள் இயங்கும்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை - அரக்கோணம், சென்னை - கும்மிடிப்பூண்டி, சென்னை - வேளச்சேரி, சென்னை - செங்கல்பட்டு, ஆகிய வழித்தடங்களில் ரெயில்கள் இயங்கும்.
அதே போல, கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்