என்ன இது...! இவ்ளோ இருட்டா இருக்கு...? 'பெட்ரோல் திருட வெளிச்சத்திற்காக செய்த வேலை...' - கடைசியில அதுவே வினையா முடிஞ்சுது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பைக்கில் பெட்ரோல் திருடும் போது கொள்ளையர்கள் தீக்குச்சி கொளுத்தியதால், பைக்கே பற்றி எரிந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த பத்ரி என்பவர், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்த்தில் இருக்கும் பெட்ரோலை திருடும் பணியையே தன் தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்த போது, இருட்டாக இருந்ததால் வெளிச்சத்திற்காக தீக்குச்சியை கொளுத்தியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக தீப்பொறியானது, சிதறிக்கிடந்த பெட்ரோல் மீது பட்டு குப்பென்று பற்றிக்கொண்டுள்ளது. இதனால் பெட்ரோல் திருட முயன்ற பத்ரி, வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்தான இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்