நாளைக்கு 'சென்னையில்' நிறைய ஏரியால 'பவர் கட்' இருக்காமே...! 'டைமிங்' என்ன தெரியுமா...? - முழு விவரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (19-06-2021) மின்தடை செய்ய உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

நாளைக்கு 'சென்னையில்' நிறைய ஏரியால 'பவர் கட்' இருக்காமே...! 'டைமிங்' என்ன தெரியுமா...? - முழு விவரங்கள்...!

பல மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின்தடை இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதோடு எந்தெந்த பகுதிகளில் மின்தடை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் நாளை (19-06-2021) காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இருக்கும்.

அதோடு, திருமுல்லைவாயில் பகுதியில், லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும். மணலி புதுநகர் பகுதியான மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை இருக்கும்.

மேலும், பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு, அடையார் பெசன்ட் மற்றும் அடையார் சாஸ்திரி நகர், வண்ணாந்துறை போன்ற பகுதிகளிலும்,  டி.எம்.எம். தெரு, அண்ணா காலனி, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம் பகுதியிலும் மின்தடை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதிகளான 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளின் அருகிலும், வேளச்சேரி கிழக்கு பகுதியான டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், VGP செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனியில் மின்தடை இருக்கும்.

அதனை தொடர்ந்து, பட்டாபிராம் பகுதிகளான ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், திருமுல்லைவாயில் பகுதியான லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐ.டி கோரிடர் பகுதிகளான ஈ.டி.எல். பகுதி, சோளிங்கநல்லூர் பகுதி, தரமணி பகுதி, துரைப்பாக்கம் பகுதி, எழில் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், புழல் பகுதியான வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஸ்டான்லி பகுதியான அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக சைதாப்பேட்டை பகுதிகளான ரெங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், போரூர் பகுதிக்குள் வரும் கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், நீலாங்கரை பகுதியாக கூறிப்பிடும் ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை இருக்கும்.

அதோடு பாலவாக்கம் பகுதியில் இருக்கும் சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனிகளிலும், கிண்டி பகுதியான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், கே கே நகர் பகுதிக்குட்பட்ட அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலும், அம்பத்தூர் பகுதிகுட்பட்ட புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின்தடை என செய்தி வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்