'மாவட்டம் விட்டு மாவட்டம் போறீங்களா'?... 'இ பாஸுக்கு இந்த டோக்கனை கூட காட்டலாம்'... தமிழக அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்குப் பத்திரப்பதிவு டோக்கன்களை இ பாஸாக பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மூடப்பட்டது. அதன்படி பத்திரப் பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டது. இந்தச்சூழ்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது .
இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ளார் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல இ பாஸ் வேண்டி விண்ணப்பித்தார்கள். அதோடு மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் அவசியம் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கன்களை இ பாஸாக பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்