இந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.  வரும் 17-ம் தேதி, மற்றும் 21, 22-ம் தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதற்கிடையில், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பு நிலையான 440 மி.மீ. மழை அளவை எட்டியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை மழை முடிய இன்னும் 15 நாள்கள் உள்ளதால், பல மாவட்டங்களில் இயல்பான மழை அளவு எட்ட வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

RAIN, ALERT, CHENNAI, IMD