'வீட்ல யாரும் இல்ல...' 'இதான் சரியான நேரம் என...' 'வீட்டு பேக்சைடு வழியா புகுந்து...' - அரங்கேற்றிய கொடுமை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த பொன்னேரி அருகே இருக்கும் உத்தகண்டிகை கிராமத்தில் ஒப்பந்ததாரர் முனிநாதன் என்பவரின் வீட்டில் சுமார் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பின்பக்க பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொன்னேரிப் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகள் மட்டுமில்லாமல் 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் ரூ.2.5 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்