'காற்று' மாசில் டெல்லியை 'மிஞ்சிய' சென்னை.. இந்த இடங்கள்ல.. 'ரொம்பவே' மோசமாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காற்று மாசில் சென்னை, டெல்லியை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வரும் காற்று மாசு தற்போது சென்னையையும் ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.

'காற்று' மாசில் டெல்லியை 'மிஞ்சிய' சென்னை.. இந்த இடங்கள்ல.. 'ரொம்பவே' மோசமாம்!

நேற்று காலை நிலவரப்படி மணலியில் 209 புள்ளிகளும், கொடுங்கையூரில் 307 , அண்ணாநகர் 239, ராமாவரத்தில் 276, ஆலந்தூரில் 156, வேளச்சேரியில் 139, கோவிலம்பாக்கத்தில் 139 புள்ளிகளாக காற்று மாசு பதிவானது. காலை நேரங்களில் டெல்லியில் காற்றின் தரம் 235 ஆக உள்ளது. அதே நேரம் சென்னையில் 256 ஆக இருக்கிறது.

இது காற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளதைக் குறிக்கும். தனியார் அமைப்பு நடத்திய காற்று தர ஆய்வில் வேளச்சேரி, மணலி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் உள்ள காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது தெரியவந்துள்ளது . குறிப்பாக இன்று காலை நேரப்படி வேளச்சேரியில் காற்றின் தரம் 256 ஆகவும், ஆலந்தூரில் 251 ஆகவும் உள்ளது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.