“எங்களை காப்பாத்துங்க”.. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பெண்ணின் போன் கால்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தாயையும், குழந்தையையும் அறையில் பூட்டி வைத்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எங்களை காப்பாத்துங்க”.. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பெண்ணின் போன் கால்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!

Also Read | “வடகறியில் உப்பு அதிகமா இருக்கு”.. சமையல் மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்.. தலைமறைவான ஹோட்டல் மேனேஜர்..!

சென்னை கோடம்பாக்கம், கோவிந்தராஜன் தெருவில் வசித்து வருபவர் அமலா (வயது 60). இவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தனது மகன் சதீஷ் குமார் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள் மற்றும் காவலர் செல்வகணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு சென்று விசாரித்ததில், சதீஷ் குமார் அவரது தாய் அமலாவையும், தனது தங்கையின் கைக்குழந்தையையும் வீட்டின் அறை ஒன்றில் பூட்டி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சதீஷ் குமாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தலைமை காவலர் பெருமாளை தாக்கிய சதீஷ் குமார் தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai police rescue old woman at house in Kodambakkam

இதனிடையே அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அமலா மற்றும் குழந்தையை போலீசார் மீட்டனர். இதனை அடுத்து அமலா மற்றும் காவலர்கள் இருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சாதுர்யமாக செயல்பட்டு வயதான முதாட்டியையும், குழந்தையையும் மீட்ட கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள் மற்றும் காவலர் செல்வகணேஷ் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CHENNAI, CHENNAI POLICE, RESCUE, OLD WOMAN, HOUSE, KODAMBAKKAM, சென்னை

மற்ற செய்திகள்