‘கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்’.. ஆம்புலன்ஸாக மாறிய போலீஸ் வாகனம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பிரவச வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்’.. ஆம்புலன்ஸாக மாறிய போலீஸ் வாகனம்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

சென்னை ஆதம்பாக்கம், ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ். இவரது மனைவி சியாமளா (27). நிறைமாத கர்ப்பிணியான இருவருக்கு கடந்த 26ம் தேதி அதிகாலை 3 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவதற்காக வாகனத்துக்கு ஏற்பாடு செய்ய ஹரீஸ் முயற்சித்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவருக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. ஆனால் சியாமளாவோ வலியால் துடித்துள்ளார்.

உதவிக்கும் யாரும் இல்லாததால் குடும்பத்தினர் என்னசெய்தென்று தெரியாமல் திகைத்துள்ளனர். தனக்கு தெரிந்த அனைவரைக்கும் ஹரீஸ் போன் செய்து பார்த்துள்ளார். அந்த நேரத்தில் சாலையில் ஆட்டோ, டேக்ஸி ஏதும் இருக்கிறாதா என சியாமளாவின் அம்மா வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆதம்பாக்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் வள்ளி, காவலர் சக்திவேல் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்துள்ளனர்.

சாலையில் போலீஸ் வாகனம் வருவதைப் பார்த்த சியாமளாவின் அம்மா உடனே வழி மறித்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரிக்கையில் அவர் விவரத்தை கூறியுள்ளார். உடனே கவலைப்படாதீங்க நாங்க உதவி செய்கிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வலியால் துடித்த கர்ப்பிணி சியாமளாவை போலீஸ் வாகனத்திலேயே அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சியாமளாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீசாருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்