சென்னையில் ‘ஆபாச பேட்டி’ வீடியோ விவகாரம்: யூ-டியூப் சேனல்களுக்கு வந்திருக்கும்.. 'அதிரடி' எச்சரிக்கை!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பிரபல யூ டியூப் சேனல்களில் ஒன்றான சென்னை டாக்ஸ் சேனலில், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுப்பதாக கூறி தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

சென்னையில் ‘ஆபாச பேட்டி’ வீடியோ விவகாரம்: யூ-டியூப் சேனல்களுக்கு வந்திருக்கும்.. 'அதிரடி' எச்சரிக்கை!!!

இதனையடுத்து, நடவடிக்கை எடுத்த போலீசார், அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், கேமரா மேன் மற்றும் யூ டியூப் சேனல் உரிமையாளர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதன் பிறகு நடத்தப்பட்ட போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அனைத்து யூ டியூப் சேனல்களுக்கும் சென்னை காவல் ஆணையர் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். தகாத வார்த்தைகள் மற்றும் ஆபாசமான வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும், அதே போல ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மற்ற செய்திகள்