LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.60 லட்சம்.. அசராமல் உருட்டிய இளைஞர்.. ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஆன்லைன் மூலமாக இளம்பெண்ணிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிர்ஷ்ட குலுக்கலில் ரூ.60 லட்சம்.. அசராமல் உருட்டிய இளைஞர்.. ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Also Read | 8 மாசத்துக்கு முன்னாடி காணாமல்போன பெற்றோரை இழந்த சிறுவன்.. மொத்த படையையும் இறக்கி கண்டுபிடிச்ச போலீஸ்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

ஆவடி பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது வாட்ஸாப் மூலமாக அவருக்கு பழக்கமாகிய நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாக உருட்டியிருக்கிறார். மேலும், தான் கூறும் நிறுவனத்துக்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேவை எனக்கூறிய அவர், இதன் மூலமாக வாரத்துக்கு 5000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைகாட்டியுள்ளார்.

Chennai police arrested man who cheated 6 lakh RS From woman

வலை

இதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பெண், தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். அப்போது தனது முதல் வலையை விரித்த அந்த ஆசாமி முன்பணமாக 5000 ரூபாய் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். வேலை பெறும் ஆர்வத்தில் இளம்பெண்ணும் பணத்தை அனுப்பியிருக்கிறார். அப்போது அடுத்த வலையை வீசியிருக்கிறார் அந்த ஆசாமி. அதாவது அதிர்ஷ்ட குலுக்கல் திட்டம் ஒன்று இருப்பதாகவும் இளம்பெண்ணுக்கு அதில் 60 லட்ச ரூபாய் விழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அதற்கு முன்பணமாக 7.5 லட்ச ரூபாய் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து தனது நகைகளை அடமானம் வைத்து 6 லட்ச ரூபாய் வரையில் அனுப்பியிருக்கிறார் அந்த இளம்பெண். இதனிடையே  தனக்கு விழுந்த 60 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்குமாறு பெண் கேட்கவே, அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார் அவர். மேலும், கூடுதலாக 5000 ரூபாய் பணத்தை செலுத்தினால் அவர் கட்டிய 6 லட்ச ரூபாயை திரும்பித் தருவதாக தெரிவித்திருக்கிறார்.

Chennai police arrested man who cheated 6 lakh RS From woman

புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மதன் குமார் என்பவர் இந்த சதிவேலைகளை செய்துவந்தது தெரியவந்திருக்கிறது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்த மதன்குமார் தலைமைறைவாகி இருந்த நிலையில், போலீசார் தற்போது அவரை கைது செய்திருக்கின்றனர்.

Also Read | "இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப்போகிறோம்".. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி ட்வீட். முழு விபரம்..!

CHENNAI, POLICE, ARREST, MAN

மற்ற செய்திகள்