ஆந்திரா - சென்னை இடையே நடக்கும் போதை சப்ளை... காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்.. வீட்டை சுற்றி வளைத்த போது வெளிவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் போதை பொருட்களை விற்பனை செய்துவந்ததாக 4 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | இலங்கை அரசியலில் திருப்பம்.. ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிய அதிபர் கோத்தபய.. பரபரப்பில் இலங்கை..!
தமிழகத்தில் சமீப காலமாக வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து வந்தது. இதனை அடுத்து வெளி மாநிலங்களுக்கு சென்று ரகசியமாக போதை பொருட்களை கடத்திவரும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர் பரிசோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் ஆந்திராவைச் சேர்ந்த 4 தனியார் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து போதை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளரான ஷாலினி இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வந்தார். அப்போது நான்கு மாணவர்களையும் காவல்துறையினர் கண்காணிக்க துவங்கினர். அப்போது, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக வீட்டை சுற்றி வளைத்திருக்கின்றனர்.
4 கிலோ
அந்த வீட்டில் தங்கியிருந்த நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இவர்கள் அனைவரும் ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 300 கிராம் போதை பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
தொடர்ந்து அந்த மாணவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆந்திராவில் இருந்து நேரடியாக இவர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும், சில நேரங்களில் இவர்களே ஆந்திராவுக்கு பயணித்து போதை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது.
கைது
சென்னையில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததாக ஆந்திராவை சேர்ந்த 4 மாணவர்களையும் சோலையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் மதுஒழிப்பு பிரிவு காவல்துறையினர். இதனையடுத்து இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பிறகு 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்த 4 மாணவர்கள் சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்துவந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்திருப்பது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்