RRR Others USA

"மகன் வரணும்னா 1 கோடி வேணும்"..தொழிலதிபருக்கு வந்த மிரட்டல் கால்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த ரவுடிகள்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபரின் மகனை கடத்திய கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது.

"மகன் வரணும்னா 1 கோடி வேணும்"..தொழிலதிபருக்கு வந்த மிரட்டல் கால்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த ரவுடிகள்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

"வீட்டு செலவுக்கு ஆன்லைன்ல கடன் வாங்கிய பெண்".. அதுக்கு அப்புறம் நடந்த மிரள வைக்கும் சம்பவம்.. கோவையில் பரபரப்பு

அம்பத்தூர் அடுத்த பாடி சத்தியவதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஆதர்ஸ் சுப்பிரமணியம் (27). இவர்கள் இருவரும் இணைந்து அத்திப்பட்டு பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றினை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தனது நிறுவனத்தில் இருந்து வழக்கம்போல வீடு திரும்பிக்கொண்டிருந்தார் சுப்பிரமணியன். அப்போது அவரது வாகனத்தை ஒரு கார் வழிமறித்திருக்கிறது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் சுப்பிரமணியத்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச்சென்றிருக்கின்றனர். இதனையடுத்து, விஷயம் அறிந்த சுப்பிரமணியத்தின் தந்தை சரவணன் கொரட்டூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்.

Chennai police arrest 3 men in kidnap case

விசாரணை

இந்நிலையில், கொரட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியது வாடகை கார் என்பது தெரியவந்தது. மேலும், அந்தக் காரின் எண்ணை கண்டறிந்த போலீசார், கார் உரிமையாளரிடம் பேசியிருக்கின்றனர்.

அப்போது 'காரில் ஜிபிஎஸ் கருவி இருப்பதாகவும் அதன்மூலம் கார் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ளலாம்' எனவும் கார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கார் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதன் பலனாக காளஹஸ்தியில் இருந்த 3 கடத்தல்காரர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. ஒருவர் தப்பியோடிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Chennai police arrest 3 men in kidnap case

போலீசார் நடத்திய விசாரணையில் கைதானவர்கள் ஆவடி அருகே ஆரிக்கம்பேடு லட்சுமி நகரை சேர்ந்த செந்தில்குமார் (37), சென்னை முகப்பேர் மேற்கு 3வது பிளாக்கை சேர்ந்த சிலம்பரசன் (20), அயப்பாக்கம் அபர்ணா நகரை சேர்ந்த ஜீவன் பிரபு (21) என்று தெரிந்தது.

மகனை விடுவிக்க வேண்டுமானால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.

Chennai police arrest 3 men in kidnap case

காட்டிக் கொடுத்த ஜிபிஎஸ்

சொந்த காரில் சென்றால் மாட்டிக்கொள்வோம் என திட்டமிட்டு வாடகை காரில் சென்று தொழிலதிபரின் மகனை கடத்திய கும்பல் அதில் இருந்த ஜிபிஎஸ் கருவியை கண்காணிக்க தவறியதால் காவல்துறையிடம் எளிதாக சிக்கிய சம்பவம் சென்னை மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெளில பியூட்டி பார்லர்.. உள்ள உல்லாச விடுதி.. கஸ்டமர் போல வலைவிரித்த காவல்துறை..!

CHENNAI, POLICE, CHENNAI POLICE, ARREST, MAN, KIDNAP CASE, விசாரணை, போலீஸ்

மற்ற செய்திகள்