VIDEO : "கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது தமிழக மக்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக, விமானிகள் விமானத்திற்குள் இருக்கும் பயணிகளுக்கு வேண்டி ஏதேனும் அறிவிப்பை வெளியிடும்போது ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியை பயன்படுத்துவர். ஆனால், இந்த விமானத்தின் பைலட் தமிழில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக, இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.
அவர் தனது அறிவிப்பில் கடல் நீர் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம், சென்னையின் காவிரி ஆறு ஓடுவது எங்கே, திருச்சி ஸ்ரீ ரங்கம் தெரியும் திசை உள்ளிட்ட பல தகவல்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 30 வயதான கேப்டன் ப்ரியா விக்னேஷ் தான் அந்த தமிழ் குரலுக்கு சொந்தக்காரர்.
இது தொடர்பாக அந்த விமானி ப்ரியா விக்னேஷ் கூறுகையில், 'கடந்த ஒரு மாத காலமாக தமிழில் அறிவிப்புகளை சொல்ல வேண்டும் என பயிற்சி செய்தேன். இன்று எனது நண்பர் ஒருவர் மூலமாக இதனை வீடியோ எடுத்து வெளியிடவும் முடிவு செய்தேன்.மேலும், தமிழில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து மற்றவர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள வேண்டி இதனை முயற்சி செய்தேன். ஆனால் இந்த அளவு வீடியோ வைரலாகும் என எண்ணவில்லை' என்றார்.
மேலும், 'பொதுவாக விமானியும் விமானத்தில் உள்ள பயணிகளும் சந்தித்து கொள்ள வாய்ப்புகள் அமையாது. அதனால் இந்த மாதிரியான ஒரு முயற்சியை கையில் எடுத்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு பயணிகள் மட்டுமல்லாது, உடனிருந்த விமானிகளும், உயர் அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்' என தெரிவித்துள்ளார்.
ப்ரியா விக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தென் இந்தியாவின் வணிக விமானங்களில் பைலட்டாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முழு வீடியோவை காண கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்க:
மற்ற செய்திகள்