'அந்த வார்த்தையில தான் விழுந்துட்டோம்'... '500 கிலோ தங்கம்'... 'மக்களை முட்டாளாக்கிய மாஸ்டர் பிளான்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கி வந்த ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் மற்றும் பேங்கர்ஸ் என்ற நிறுவனம், இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா நகைக்கடன் வழங்கும் என்ற சலுகையை அறிவித்திருந்தது.
இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில், நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அங்கு அடகு வைக்கும் நகைகளை, வேறு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் மறு அடகு வைத்து பணம் பெற்று வந்த ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர், கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தை மூடி விட்டு சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ தங்க நகைகளுடன் கூண்டோடு தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து, வியாசர்பாடியைச் சேர்ந்த உமர் அலி என்பவர், இழந்த நகைகளை மீட்டுத் தரக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கூடுதல் டி.ஜி.பி, ஐ.ஜி மட்டத்திலான அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசுர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணையை நடத்தி, நகைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்